தொடங்கியது மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு.., நேரலை வீடியோ உள்ளே
உலகப் புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலையில் தொடங்கி களைகட்ட ஆரம்பித்துள்ளது.
பாலமேடு ஜல்லிக்கட்டு நேரலை
உலகப் புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலையில் 7.40 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1,000-க்கும் மேற்பட்ட காளைகளும், 900-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
தை திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும்.
அந்தவகையில் நேற்று பொங்கல் பண்டிகை நாளில் மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்நிலையில், இன்று (ஜன.15) காலை பாலமேட்டில் அமைந்துள்ள வாடிவாசலில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.
இந்த போட்டியை பாலமேடு கிராம பொது மகாலிங்க மடத்துக் கமிட்டியும் மதுரை மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்துகின்றனர்.
இந்தப் போட்டியை தமிழக பத்திரப் பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
குறிப்பாக, காளைகள் மற்றும் மாடு பிடி வீரர்களுக்கு உரிய மருத்துவ சோதனை செய்த பிறகே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர்.
இதில், விதிமுறைகளை மீறுபவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுகின்றனர். சிறப்பாக விளையாடும் காளைகள் மற்றும் மாடு பிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |