காரசாரமாக மதுரை மக்களின் சுவையில் மட்டன் எலும்பு குழம்பு செய்வது எப்படி?
Tomato
Onion
Healthy Food Recipes
By Kirthiga
பொதுவாகவே அனைவருக்கும் சுவையான கறி செய்து சாப்பிடுவது என்றால் மிகவும் பிடிக்கும்.
அதிலும் அசைவத்தை சாப்பிட விரும்புபவர்கள் எப்போதும் வித்தியாசமான முறையில் செய்து பார்ப்பார்கள்.
அந்தவகையில் அனைவருக்கும் பிடித்த மட்டன் எலும்பு குழம்பை எப்படி மதுரை மக்களின் சுவையில்ல செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மட்டன் எலும்பு அரை கிலோ
- சின்ன வெங்காயம் - 200 கிராம்
- தக்காளி 1
- மல்லித்தூள் - 3 ஸ்பூன்
- மட்டன் மசாலா - 1 ஸ்பூன்
- தனி மிளகாய் தூள் - ஒன்றரை ஸ்பூன்
- மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
- நல்லெண்ணெய் - 6 ஸ்பூன்
- தாளிக்க இரண்டு ஏலக்காய், 1/4 ஸ்பூன் சோம்பு மல்லி இலை, கருவேப்பிலை
- சிறிதளவு உப்பு -தேவையான அளவு
அரைப்பதற்கு தேவையான பொருட்கள்
- தேங்காய் துருவல் - கால் மூடி
- முந்திரிப்பருப்பு - 6
- சீரகம் - 1ஸ்பூன்
- அரைக்க பூண்டு 10 பல்
- இஞ்சி 2 துண்டு
- பட்டை, கிராம்பு, கல்பாசி ஜாதிபத்திரி - சிறிதளவு சோம்பு- 1 ஸ்பூன்
செய்முறை
- முதலில் மட்டனின் எலும்பை கழுவி எடுத்துக்கொள்ளவும்.
- பின் இஞ்சி, பூண்டு, பட்டை, சோம்பு, கிராம்பு, ஜாதிபத்திரி,கல்பாசி அனைத்திலும் தண்ணீர் சேர்த்து வைத்துக்கொள்ளவும்.
- பின் தேங்காய், சீரகம்,முந்திரிப்பருப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
- அடுத்து அடுப்பில் குக்கரை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி மட்டன் எழும்பை ஒரு நிமிடத்திற்கு வதக்கிய பின், அதில் இஞ்சி, பூண்டு விழுது மற்றும் சின்ன வெங்காயம் சேர்க்கவும்.
- பிறகு மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மட்டன் மசாலா சேர்த்து 2 நிமிடத்திற்கு கிளறவும்.
- பச்சை வாசணை சென்றவுடன் மட்டன் எலும்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி எட்டு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
-
மட்டன் எலும்பு நன்கு வந்தவுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, இரண்டு ஏலக்காய், அரை ஸ்பூன் சோம்பு கருவேப்பிலை, மல்லி இலை சேர்த்தால் சுவையான மதுரை மக்களின் மட்டன் எலும்பு குழம்பு தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US