ட்ரம்பிற்கு சிக்கல்... Julian Assange வழக்கில் சாதித்த சட்டத்தரணியைக் களமிறக்கிய வெனிசுலா
நியூயார்க் நீதிமன்றத்தில் திங்களன்று விசாரணையை எதிர்கொண்ட நிக்கோலஸ் மதுரோவிற்கு ஆதரவாகக் களமிறங்கிய சட்டத்தரணி ஒருவர் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
அசாஞ்சேயின் வழக்கில்
ட்ரம்ப் நிர்வாகம் சிறைபிடித்துள்ள வெனிசுலா ஜனாதிபதிக்கு ஆதரவாகக் களமிறங்கியவர் Julian Assange வழக்கில் சாதித்த சட்டத்தரணி Barry Pollack என்பவரே.
--- Nytimes
Julian Assange வழக்கில் பல வருடங்களாக செயல்பட்டவர், 2024ல் பிரித்தானியா சிறையில் இருந்து Julian Assange-வை மீட்டும் சென்றுள்ளார்.
நியூயார்க்கின் வால் ஸ்ட்ரீட்டில் செயல்பட்டுவரும் Harris St Laurent & Wechsler சட்டத்தரணிகள் குழுமத்தின் பங்குதாரர்களில் பொல்லாக்கும் ஒருவர்.
திங்களன்று நடந்த விசாரணையில், தாம் நிரபராதி என்றும் ஒரு போர்க் கைதி என்றும் மதுரோ வாதிட்டுள்ளார். மதுரோவின் தனிப்பட்ட சட்டத்தரணியாக இந்த வழக்கை பொல்லாக் எடுத்துக்கொள்ளவிருக்கிறார், இது அசாஞ்சேயின் வழக்கை போலவே சவாலானதாக அமையக்கூடும் என கூறுகின்றனர்.
மதுரோ மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். பொல்லாக் ஒரு முழுமையான மற்றும் ஆழமாகச் சிந்திக்கும் சட்டத்தரணி என்றே கூறுகின்றனர்.
---Reuters
அவர் வழக்குகளையே வாழ்வாகக் கொண்டுள்ளார், மேலும் நீதிபதிகள் முன்னிலையில் அவருக்கு என ஒரு இயல்பான பாணி உள்ளது என்றும் கூறுகின்றனர்.
சட்டப்பூர்வத்தன்மை என்ன
முதல் நாள் விசாரணையிலேயே, மதுரோ மீதான இந்த இராணுவ நடவடிக்கை மற்றும் கடத்தலுக்கு சட்டப்பூர்வத்தன்மை என்ன என்றே பொல்லாக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் தலைவராக இருப்பதால், மதுரோவை அந்த நாட்டில் அத்துமீறி கைது செய்ததற்கு முறையான விளக்கத்தையும் கோரியுள்ளார்.
---Photo: XNY/Star Max
Julian Assange வழக்கில் வாதிட்டது மட்டுமின்றி, முன்னாள் Enron கணக்காளர் மைக்கேல் க்ராட்ஸை வழக்கில் இருந்து விடுவித்ததில் முக்கியப் பங்கு வகித்தார்.
மட்டுமின்றி, பெற்றோரை கொலை செய்ததாகத் தவறாகக் குற்றம் சாட்டப்பட்டு 17 ஆண்டுகள் சிறையில் கழித்த Martin Tankleff-க்கு விடுதலைப் பெற்றுத் தர உதவியதும் பொல்லாக் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |