படப்பிடிப்பில் பாம்பிடம் கடிபட்ட பாடகி! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
அமெரிக்காவில் படப்பிடிப்பின்போது பாடகியை பாம்பு கடித்த அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் வசிக்கும், வளர்ந்துவரும் இளம் பாடகியான Maeta, சமீபத்தில் ஒரு பாடலின் விடியோவிற்காக படப்பிடிப்பு நடத்தியுள்ளார்.
அந்த படப்பிடிப்பில், செட் பிராபர்ட்டியாக உயிருள்ள பாம்புகளை பயன்படுத்தியுள்ளனர். படப்பிடிப்புக்காக அந்த பாம்புகளை, கீழே படுத்துக்கொண்டிருந்த பாடகி Maeta-வின் உடல் மீது விட்டுள்ளனர்.
இரண்டாவதாக ஒரு பாம்பை அவர் மீது விடும்போது, முதலில் அவர் மீது ஊர்ந்து கொண்டிருந்த ஒரு பாம்பு, அவரது தாடையில் கடித்துவிட்டது.
உடனடியாக Maeta அந்த பாம்பை கையில் பிடித்து இழுத்து வீசி, அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
இந்த அதிர்ச்சிகரமான அனுபவத்தின் வீடியோ கிளிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Maeta பகிர்ந்துள்ளார்.
அதில் "உங்களுக்காக வீடியோக்களை உருவாக்க நான் என்னவெல்லாம் செய்கிறேன்" பாருங்கள் அவர் தனது ரசிகர்களிடம் கூறியுள்ளார்.
பகிரப்பட்டதிலிருந்து, வீடியோ 4.75 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. இப்பதிவின் கீழ் கருத்துகள் பிரிவில் நெட்டிசன்கள், பாடகி தனது வீடியோக்களில் விலங்குகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தினர்.
மேலும், பாம்பு கடித்த பிறகு அவர் நலம் பெற்றதாக நெட்டிசன்கள் சிலர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.