Maggi நூடுல்ஸ் ஏற்றிச் சென்ற லொறி ஆற்றில் கவிழ்ந்து விபத்து: சாரதி பலி
இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் Maggi நூடுல்ஸ் ஏற்றிச் சென்ற லொறி ஒன்று ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஆற்றில் கவிழ்ந்த லொறி
மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள ரத்னகிரி மாவட்டத்தில், ஜக்புதி என்னும் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்திருக்கிறது.

புதன்கிழமை மாலை பாலம் ஒன்றில் சென்றுகொண்டிருந்த லொறி ஒன்று 100 மீற்றர் உயரத்திலிருந்து அந்த ஆற்றில் பாய்ந்துள்ளது.
சுமார் 400 மீற்றர் தூரத்துக்கு அந்த லொறி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அநிலையில், லொறியின் சாரதி லொறிக்குள் சிக்கிக்கொண்டுள்ளார்.
ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியதால் சாரதியை மீட்பது கடினமாகியுள்ளது.
பல மணி நேரம் கழித்து ஆற்றில் மூழ்கியிருந்த லொறிக்குள் சிக்கியிருந்த சாரதியின் உயிரற்ற உடலைத்தான் மீட்புக் குழுவினரால் மீட்க முடிந்துள்ளது.
அவர் யார், எதனால் இந்த விபத்து நேர்ந்தது என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |