மாயமான ஆறு வயது சிறுவன்... கதறிய தந்தையின் அருகில் நின்று முதலைக்கண்ணீர் வடித்த காதலி: ஒரு இடியாப்ப சிக்கல் வழக்கு
அமெரிக்காவின் ஹியூஸ்டனின் வாழ்ந்து வந்த ஒரு சிறுவன் மாயமான வழக்கு இடியாப்பச் சிக்கலாக குழப்பம் அடைய வைத்துள்ளது.
Dalton Olson, Sarah Olson தம்பதிக்குப் பிறந்த மகன் Samuel Olson(6). தம்பதியர் விவாகரத்து செய்துவிட்டனர். மகன் Samuel தாயுடன் அனுப்பப்பட்டான், என்றாலும் மாறி மாறி இரு பெற்றோருடனும் வாழ்ந்துவந்தான் Samuel.
Dalton தற்போது தன் காதலியான Theresa Balboaவுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், சென்ற மாதம் (மே மாதம்) 27ஆம் திகதி, தன் மகனைக் காணவில்லை என கண்ணீருடன் பேட்டியளித்தார் Dalton.
அவரது அருகில் அவரது தோளில் சாய்ந்து விசும்பினார் Theresa. Samuelஐ கடைசியாக யார் எங்கே பார்த்தீர்கள் என்று கேட்டால், ஆளாளுக்கு ஒவ்வொரு பதிலைச் சொல்கிறார்கள். மே 27ஆம் திகதி, தான் Samuelஐ பள்ளிக்கு அழைத்துச் சென்றதாகவும், பொலிஸ் அதிகாரி ஒருவருடன் அங்கு அந்த Samuelஇன் தாயாகிய Sarah, குழந்தையை தன்னிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரித்துச் சென்று விட்டதாகவும், தான் குழந்தையின் தந்தையின் காதலி மட்டுமே என்பதால் தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும் கண்ணீர் விட்டார் Theresa.
குழந்தையின் தாய் Sarahவைக் கேட்டால், தான் 2020 ஜனவரிக்குப் பின், கிட்டத்தட்ட 16 மாதங்களாக குழந்தையைப் பார்க்க அனுமதிக்கப்படவே இல்லை என்று கூறியிருக்கிறார். Samuelஇன் பாட்டியோ, அவன் மே 8,9 ஆகிய நாட்களில் தன்னுடன் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
ஆனால், பொலிசார் விசாரணையில், ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிதான் அவனை பள்ளியின் அருகில் கடைசியாக பார்த்ததாக உறுதி செய்யப்பட்ட தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், Daltonஇன் காதலியான Theresa, தென்கிழக்கு ஹியூஸ்டனில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு ஆணுடன் வாழ்ந்து வந்ததாகவும், அங்கு Samuel இருந்திருக்கலாம் என்றும் ஒரு தகவல் கிடைக்க, அந்த பகுதியை பொலிசார் சோதனையிட்டுள்ளார்கள்.
பின்னர் ஹியூஸ்டனிலிருந்து 135 மைல் தொலைவிலுள்ள ஜாஸ்பர் என்ற இடத்திலுள்ள ஒரு ஹொட்டலில் Theresa தங்கியிருப்பதாக பொலிசாருக்கு ஒரு துப்பு கிடைத்துள்ளது.
Theresaவுடன் மொபைலில் பேசியவாறே அங்கு சென்ற பொலிசார், அவர் அங்குள்ள ஒரு ஹொட்டல் அறையில் தங்கியிருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள். அதே அறையை சோதனையிட்டபோது, அங்கிருந்த பை ஒன்றிற்குள் ஒரு சிறுவனின் உடல் மறைத்துவைக்கப்பட்டிருப்பதைக் கண்ட பொலிசார், உடனே Theresaவைக் கைது செய்துள்ளார்கள். அந்த உடல் நீண்ட நாட்களாக அங்கிருந்ததால், சிதைந்து போயுள்ளது. அது Samuelஉடையது என நம்பப்பட்டாலும், உடற்கூறு ஆய்வுக்குப் பின்பே அது உறுதி செய்யப்படும்.
தற்போதைக்கு இறந்த ஒருவரின் உடலை அவமதித்ததற்காக Theresa கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளார். பொலிசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த வழக்கில் வேடிக்கை என்னவென்றால், குழந்தை Samuelஐக் குறித்து யாருக்குமே எதுவும் உறுதியாகத் தெரியவில்லை. நீதிமன்றம் Samuelஐ அவனுடைய தாயாகிய Sarahவிடம் ஒப்படைந்துள்ளது, அவரோ 16 மாதங்களுக்கு மேலாக அவனைப் பார்க்கவே இல்லை என்கிறார்.
குழந்தையைக் காணவில்லை என மே 27ஆம் திகதி அதன் தந்தை பேட்டி கொடுக்கிறார், கூடவே நின்று முதலைக் கண்ணீர் வடிக்கும் அவரது காதலியாகிய Theresa, குழந்தையின் தாய்தான் அவனைக் கடத்திச் சென்றதாக கூறியுள்ளார்.
குழந்தையின் பாட்டியோ, தான் மே மாதம் 8,9 திகதிகளில் குழந்தையுடன் தங்கியிருந்ததாக தெரிவித்துள்ளார். கடைசியில், குழந்தையைக் காணவில்லை என முதலைக்கண்ணீர் வடித்த Theresa, சம்பந்தமில்லாத ஒரு இடத்திலுள்ள ஒரு ஹொட்டலில், குழந்தையின் உடலுடன் கையும் களவுமாக சிக்கி, கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆக, குழந்தை எங்கே இருக்கிறான் என யாரும் அவன் மீது அக்கறை காட்டியதாக தெரியவில்லை.
இப்போது அவன் எங்கே, கொல்லப்பட்ட அந்த குழந்தைதான் Samuelஆ? அப்படியானால், அவனைக் கொலை செய்தது யார், Theresa கொலை செய்தார் என்றால், அவர் ஏன் கொலை செய்தார், அப்புறம் ஏன் குழந்தையைக் காணவில்லை என அதன் தந்தையுடன் சேர்ந்து முதலைக்கண்ணீர் வடித்து பேட்டி கொடுத்தார்? குழந்தையின் தாயாகிய Sarah ஏன் 16 மாதங்களாக குழந்தையை சந்திக்க முயற்சி செய்யவில்லை? என ஆயிரம் விடை தெரியாத கேள்விகள்...
காணாமல் போன Samuelஐ தேட உதவிய Texas EquuSearch என்ற தன்னார்வலர் அமைப்பின் நிறுவனரான Tim Miller, குழந்தையைக் கடைசியாக எங்கு பார்த்தீர்கள் என்ற கேள்விக்கான சரியான பதிலைச் சொல்லக்கூடிய ஒருவரைக்கூட யாராலும் இதுவரை கண்டுபிடிக்கமுடியவில்லை. நானும் எத்தனையோ வழக்குகள் பார்த்திருக்கிறேன், இந்த வழக்கில் ஏதோ சரியில்லை என்று மட்டும் தோன்றுகிறது என்கிறார்!