தைவானில் ரிக்டர் 7.0 அளவுகோலில் மிகப்பெரிய நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்
தைவான் நாட்டில் 7.0 ரிக்டர் அளவிலான மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தைவானில் நிலநடுக்கம்
தைவான் நாட்டின் கடற்கரை நகரான இலென் நகரில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கமானது பதிவாகியுள்ளது.
உள்ளூர் நேரப்படி இரவு 11.05 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நிலநடுக்க அளவீடுகளின் படி இந்த நிலநடுக்கம் சுமார் ரிக்டர் 7.0 ஆக பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மிகப்பெரிய நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அதிர தொடங்கின.
இதனால் வீடுகளில் தூங்கி கொண்டிருந்த மக்கள் அனைவரும் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
இதுவரை ரிக்டர் 7.0 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த எந்தவொரு விவரங்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |