மகா கும்பமேளா புனித நீர் 1000 போத்தல்களில் ஜேர்மனிக்கு அனுப்பி வைப்பு
மகா கும்பமேளாவின் புனித நீர் வெளிநாட்டிற்கு தேவைப்படுவதை எடுத்துக்காட்டும் வகையில் 1000 போத்தல்களில் மகா கும்பமேளா புனித நீர் ஜேர்மனிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனிக்கு புனித நீர்
ஜேர்மனியில் உள்ள பக்தர்களுக்காக 1000 போத்தல்களில் மகா கும்பமேளா புனித நீர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உத்தரப்பிரதேச அரசு தரப்பில், "ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை பிரம்மாண்டமாக பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்ப மேளா திரிவேணி சங்கமத்தில் 66 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.
இந்த தெய்வீக நிகழ்வின் ஆன்மிகம் நீடிக்கும் வகையில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள 75 மாவட்டங்களுக்கும் தீயணைப்பு துறை மூலம் திரிவேணியின் புனித நீர் விநியோகிக்கப்பட்டது.
இந்நிலையில் சர்வதேச அங்கீகாரத்தைப் பெறும் வகையில் ஜேர்மனியில் உள்ள பக்தர்களுக்காக 1000 போத்தல்களில் மகா கும்பமேளா புனித நீர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
மேலும், மாநிலம் முழுவதும் உள்ள பக்தர்களுக்கு புனித நீரை மகா பிரசாதமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அம்மாநில அரசு கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |