தன்னை சிவன் என்று கூறி ஏமாற்றிய போலி சாமியார்: பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
மகாராஷ்டிராவில் தன்னை சிவன் என்று கூறி போலி சாமியார் ஒருவர் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணை ஏமாற்றிய போலி சாமியார்
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் ரிஷிகேஷ் வைத்யா என்ற 40 வயதுடைய போலி சாமியார் தன்னை சிவபெருமானின் அவதாரம் என்று கூறி 35 வயது பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளார்.
பால்கரில் சமூக அமைப்பு ஒன்றை நடத்தி வரும் போலி சாமியார் வைத்யா கடந்த 2023ம் ஆண்டு முகநூல் பக்கம் வழியாக 35 வயதுடைய அந்த பெண்ணுக்கு அறிமுகமாகி நெருக்கமாக பழகி வந்துள்ளார்.
மேலும் வைத்யா தன்னை சிவன் என்றும் அந்த பெண்ணை பார்வதி என்றும் கூறி நம்ப வைத்துள்ளார்.

இதையடுத்து கடந்த 2023ம் டிசம்பரில் புனே வந்த வைத்யா, அந்த பெண்ணை ஹோட்டல் அறை ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததுடன் பெண்ணுக்கு தெரியாமல் புகைப்படங்களையும் எடுத்துள்ளார்.
பின்னர் அந்த புகைப்படங்களை காட்டி அந்த பெண்ணை நீண்ட நாள் மிரட்டியும் வந்துள்ளார்.
வழக்குப்பதிவு
இந்நிலையில் சமீபத்தில் நாசிக்கில் அசோக் காரத் என்ற போலி சாமியாருக்கு எதிராக பெண் ஒருவர் தைரியமாக முன்வந்து புகார் அளித்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டதை அறிந்த இந்த பெண் தான் சந்தித்த கொடுமைகளுக்கு எதிராக புகார் அளிக்க முன்வந்துள்ளார்.
இதையடுத்து குற்றவாளிக்கு எதிராக மாணிக்பூர் காவல் நிலையத்தில் ஜீரோ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றவாளி தற்போது தலைமறைவு ஆகியுள்ள நிலையில் காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |