ஒரு ஐபோனால் ஒரு குடும்பமே பலியான விவகாரம்: சமீபத்திய தகவல்

Maharashtra
By Balamanuvelan Aug 24, 2026 04:57 AM GMT
Report

A family who fell to their deaths after an alleged argument over a an iPhone have been pictured: ஐபோனுக்கு தவணை கட்டும் விடயம் தொடர்பில் எழுந்த வாக்குவாதத்தால் பலியான குடும்பத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள சத்ரபதி சாம்பாஜிநகர் என்னுமிடத்தில் தன் பெற்றோருடன் வாழ்ந்துவந்த குணால் (Kunal Chandgude, 18) என்னும் இளைஞர் ஐபோன் ஒன்றை வாங்கியுள்ளார்.

ஒரு குடும்பமே மாண்ட பயங்கரம்

தன்னால் அதற்கு பணம் கொடுக்கமுடியாததால், தான் வாங்கிய ஐபோனுக்கு மாதந்தோறும் தவணை செலுத்த பணம் கொடுக்குமாறு தன் குடும்பத்தினரை கேட்டுள்ளார் குணால். 

ஒரு ஐபோனால் ஒரு குடும்பமே பலியான விவகாரம்: சமீபத்திய தகவல் | Maharashtra Family Fell From Hill In Iphone Issue

அதனால் சமீபத்தில் வீட்டில் வாக்குவாதம் உருவாகியுள்ளது. கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய குணால், அருகிலுள்ள மலை ஒன்றின் உச்சியில் ஏறியுள்ளார்.

அவரைப் பின்தொடர்ந்த அவரது தந்தையான முரளிதரும் (48), தாய் சங்கீதாவும், கிராம மக்களும், மலையிலிருந்து கீழே இறங்கி வருமாறு குணாலை கெஞ்சியுள்ளனர்.

அவரோ, வரமாட்டேன் என அடம்பிடித்ததுடன், தான் சாகவிரும்புவதாகக் கூறியுள்ளார். 

ஒரு ஐபோனால் ஒரு குடும்பமே பலியான பயங்கரம்

ஒரு ஐபோனால் ஒரு குடும்பமே பலியான பயங்கரம்

சுமார் மூன்று மணி நேரமாக பலர் அவரிடம் பல விதத்தில் கீழே இறங்குமாறு கோரியும் காலை 10.00 மணிக்கு மலையில் ஏறியவர் மதியம் 1.00 மணி வரை அடம்பிடித்துக்கொண்டிருக்க, அவரது தந்தை அவரைக் கீழே வருமாறு கையைப் பிடித்து இழுத்துள்ளார்.

ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை, குணாலும் அவரது தந்தையான முரளிதரும் மலை உச்சியின் மறுபக்கம் இருந்த பள்ளத்தில் விழுந்துவிட்டார்கள்.

தன் தந்தை தன் கையைப் பிடித்திருக்கும்போதே குணால் பள்ளத்தில் குதித்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 

ஒரு ஐபோனால் ஒரு குடும்பமே பலியான விவகாரம்: சமீபத்திய தகவல் | Maharashtra Family Fell From Hill In Iphone Issue

அதேபோல, கணவரும் மகனும் பள்ளத்தில் விழுந்ததைக் கண்ட சங்கீதாவும் பள்ளத்தில் குதித்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவர் குதித்தாரா அல்லது விழுந்தாரா என்பது தெரியவில்லை என தற்போது ஊடகங்கள் சந்தேகம் எழுப்பியுள்ளன.

சுமார் 250 அடி உயரத்திலிருந்து விழுந்த அந்த மூன்று பேருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்கள்.

இந்நிலையில், உயிரிழந்த குணால் மற்றும் அவரது பெற்றோரின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஏராளமான மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள நிலையில், இந்த பயங்கர சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US