அரசுப்பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்திய மகாவிஷ்ணு அவுஸ்திரேலியாவில் தஞ்சம்
சென்னையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆன்மீக சொற்பொழிவு நடத்திய மகாவிஷ்ணு என்பவர் ஆஸ்திரேலியாவில் தலைமறைவாகியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் தஞ்சம்
சென்னையில் அசோக் நகரில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் படிக்கும் 12 -ம் வகுப்பு மாணவர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்காக சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்றை நடத்த வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியை முடிவு செய்தார்.
பின்னர், சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு என்பவர் வரவழைக்கப்பட்டு சொற்பொழிவு நடத்தப்பட்டது. அப்போது அவர் மறுபிறவி குறித்து பேசியது தற்போது சர்ச்சையாக மாறியது.
அவர் பேசுகையில், "மற்ற பிறவிகளில் செய்த பாவங்களால்தான் மறுபிறவி கிடைக்கிறது. போன ஜென்மத்தில் பாவங்கள் செய்தவர்கள் தான் மறுபிறவியில் ஏழைகளாகவும், மாற்றுத்திறனாளிகளாகவும் பிறக்கின்றனர்" என்றார். இவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாக மாறியது.
இந்த சம்பவத்திற்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவன்பில் மகேஷ் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள பள்ளியில் பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் விசாரணை மேற்கொண்டார்.
இதனிடையே, மகாவிஷ்ணு அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அவர் விளக்கம் அளிப்பார் என்று திருப்பூரில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |