கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஏபி டி வில்லியர்ஸ்! அவரை புகழ்ந்து இலங்கை ஜாம்பவான்கள் மலிங்கா, ஜெயவர்தனேவின் பதிவு
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில் அவரின் எதிர்காலம் சிறப்பாக அமைய இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான்கள் வாழ்த்தியுள்ளனர்.
கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக திகழ்ந்த டிவில்லியர்ஸ் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்று டுவிட்டரில் அறிவித்தார். இதையடுத்து கிரிக்கெட்டில் அவர் படைத்துள்ள சாதனைகளை பல்வேறு பிரபல வீரர்களும் பாராட்டி டுவிட்டரில் பதிவிட்டனர்.
இலங்கை ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே பதிவில், உங்களின் அற்புதமான கிரிக்கெட் கேரியருக்கு என் வாழ்த்துக்கள். களத்திலும் வெளியேயும் புத்திசாலித்தனமான வீரர், உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
Congratulations on a fabulous career.. brilliant guy on and off the field. Wishing you all the very best in your future. Pure class ?? https://t.co/jqI0sGdvLM
— Mahela Jayawardena (@MahelaJay) November 19, 2021
மற்றொரு இலங்கை ஜாம்பவான் லசித் மலிங்கா பதிவில், ஓய்வு இனிமையானதாக இருக்கட்டும். இதுவரை இந்த விளையாட்டு கண்டுள்ள ஒரு சிறந்த வீரர் என பதிவிட்டுள்ளார்.
ஏஞ்சலோ மேத்யூஸ் பதிவில், நீங்கள் கிரிக்கெட் உலகை ஒளிரச் செய்தீர்கள், உங்களுக்கு எதிராக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது!! ஓய்வு சிறப்பானதாக இருக்கட்டும் என தெரிவித்துள்ளார்.
Happy retirement @ABdeVilliers17 ?
— Lasith Malinga (@ninety9sl) November 19, 2021
Unarguably one of the best the game has ever seen !!! ? https://t.co/Z2B5e58vkU