கொழும்பில் வெடித்த வன்முறை... இலங்கை பொலிஸ் வேடிக்கை பார்க்கிறதா? கொந்தளித்த மகிலா ஜெயவர்த்தனே
இலங்கை தலைநகர் கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் சரமாரியாக தாக்கியதற்கு இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் மகிலா ஜெயவர்த்தனே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று பிரதமர் இல்லத்தில் பிரதமர் மகிந்தா ராஜபக்ச உடன் சந்திப்பில் ஈடுபட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள், சந்திப்புக்கு பிறகு காலி முகத்திடலுக்கு சென்று அங்கு அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தினர்.
இச்சம்பவம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வீடியோவை மேற்கோள் காட்டி இலங்கை முன்னாள் வீரர் மகிலா ஜெயவரத்தனே கடும் கண்டனம் தெரிவித்தள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டதாவது, இந்த குண்டர்கள் இன்று காலை பிரதமர் அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஒன்று கூடினர், பின் அப்பாவி அமைதியான அரசாங்க எதிர்ப்புப் போராட்டக்காரர்களைத் தாக்க எண்ணற்ற அளவில் சென்றார்கள்.
கொழும்பில் பரபரப்பு... போராட்டகாரர்களை சரமாரியாக தாக்கிய அரசு ஆதரவாளர்கள்! வீடியோ ஆதாரம்
These thugs was assembled at prime minister’s official residence this morning and walked in numbers to assault innocent peaceful anti government protesters.. how can this happen ? Police and others just watching this ?? https://t.co/XnSzE0sIDu
— Mahela Jayawardena (@MahelaJay) May 9, 2022
இது எப்படி நடக்கலாம்? பொலிஸ் மற்றும் மற்றவர்கள் இதை சும்மா வேடிக்கை பார்க்கிறார்களா என ஜெயவர்த்தனே கொந்தளித்துள்ளார்.