இதுதான் ஜனநாயகமா? இதுதான் இலங்கையின் சட்டமா?.. அவமானம்! கொந்தளித்த மஹேல ஜெயவர்தன
ரம்புக்களையில் இலங்கை காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்தன கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டதை அடுத்து, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தில் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் இடையே மோதல் வெடித்தது.
மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்... இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச ட்வீட்
இதனையடுத்து, பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 13 பேர் காயமடைந்தனர், இதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மக்கள் வன்முறையில் ஈடுபட்டு, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால், அவர்களைக் கைது செய்யலாம், ஆனால் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதி கிடையாது?
இதுதான் ஜனநாயகமா? இதுதான் நாட்டின் சட்டமா? இதற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். இலங்கை காவல்துறைக்கு இது அவமானம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்தன ட்விட்டரில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.