Post Office -ன் அசத்தல் திட்டம்.., ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் 2 ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?
அதிக வட்டியை தரும் பெண்களுக்கான அஞ்சல் அலுவலக திட்டத்தை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
என்ன திட்டம்?
மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
அந்தவகையில், பெண்களுக்காக பிரத்யேகமாக மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தின் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் என்பது ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2025 வரையிலான 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும்.
தபால் அலுவலக MSSC திட்டத்தின் விண்ணப்பதாரர்கள் இந்த திட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம். பெண்கள் மட்டுமே இந்த திட்டத்திற்கு தகுதியுடையவர்கள்.
இந்த திட்டமானது 7.5 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. ரூ.1000 முதல் ரூ.2 லட்சம் வரை இதில் முதலீடு செய்யலாம். நீங்கள் ஒரு வருடம் கழித்து டெபாசிட் செய்த தொகையில் 40 சதவீதம் வரை எடுக்கலாம்.
கணக்கு திறப்பது எப்படி?
மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தின் கீழ் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கணக்குகளை தபால் நிலையத்தில் திறக்க முடியும்.
ஒரே நேரத்தில் நீங்கள் இரண்டு கணக்குகளை திறக்கலாம். ஆனால், இரண்டிற்கும் குறைந்தது 3 மாதங்கள் இடைவெளி இருக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் கீழ் மைனர் பெண்ணின் பெயரில் பாதுகாவலர் கணக்கு தொடங்கலாம். இதற்கு ஆதார் அட்டை, பான் கார்டு, புகைப்படம் ஆகிய KYC ஆவணங்கள் இருக்க வேண்டும்.
முதலீடு?
* இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் ரூ.1,50,000 முதலீட்டில் 2 வருடங்கள் டெபாசிட் செய்தால் வட்டியாக ரூ.24,033 கிடைக்கும். பின்னர், அசலும் வட்டியும் சேர்த்து முதிர்வு தொகையாக மொத்தம் ரூ.1,74,033 பெறலாம்.
* அதேபோல ரூ.2,00,000 முதலீட்டில் 2 வருடங்கள் டெபாசிட் செய்தால் வட்டியாக ரூ.32,044 கிடைக்கும். பின்னர், அசலும் வட்டியும் சேர்த்து முதிர்வு தொகையாக மொத்தம் ரூ.2,32,044 பெறலாம்.
You May Like This Video
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |