திருகோணமலையிலிருந்து தீவுக்கு தப்பியோடிய மகிந்த ராஜபக்ச! வைரலாகும் ஓடியோ
இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச குடும்பத்துடன் திருகோணமலையிலிருந்து தீவு ஒன்றிற்கு தப்பியோடியதாக சமூக வலைதளங்களில் ஓடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
கொழும்பில் நேற்று வன்முறை வெடித்ததை அடுத்து இலங்கையில் பல்வேறு இடங்களில், மகிந்த குடும்ப வீடு உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அரசியல்வாதிகள் பலரின் வீடுகள் மற்றும் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இதனையடுத்து, இன்று காலை முன்னாள் பிரதமர் மகிந்த குடும்பத்துடன் ஹெலிகாப்டர் மூலம் திருகோணாமலையில் உள்ள கடற்படை முகாமிற்கு தப்பிச்சென்றதாக செய்திகள் வெளியானது.
Listen and Share!!
— Kanishka Kavirathna (@KanishkaK09) May 10, 2022
Rajapaksha’s harboring in an island off Trincomalee. pic.twitter.com/Idimzr2yQl
மகிந்த மறைந்திருக்கும் கடற்படை முகாம் மதில் மீது கனரக இயந்திர துப்பாக்கி பொருத்தம்!
இதைத்தொடர்ந்து திருகோணமலை கடற்படை முகாம் முன் குவிந்த பொதுமக்கள், சுமார் 4 மணிநேரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மகிந்த ராஜபக்ச, அவரது மனைவி சிராந்தி ராசபக்ச, மகன் ரோஹித ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜோன்சன் பெர்னாண்டோ ஆகியோர் திருகோணமலை கடற்படை முகாமிலிருந்து ஜெட் படகில் சோபர் தீவுக்கு தப்பியோடிவிட்டதாக ஓடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
மேலும், மகிந்த ராஜபக்ச குடும்பத்துடன் சோபர் தீவில் உள்ள ஹொட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக ஓடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓடியோவில் பேசிய நபர் யார் என்பது குறித்தும், அவர் கூறிய தகவல்களின் உண்மை தன்மை குறித்தும் விவரம் ஏதும் தெரியவில்லை.