ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது
இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
யோஷித தனது தந்தை ஜனாதிபதியாக இருந்தபோது சட்டவிரோதமாக சொத்துக்களை வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ 2005 முதல் 2015 வரை ஜனாதிபதியாக இருந்தார்.
மகிந்த ராஜபக்சவின் மூன்று மகன்களில் இரண்டாவது மகன்தான் யோஷித ராஜபக்ச.
அவரது சொந்த ஊரான பெலியத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மந்தங்க தெரிவித்துள்ளார்.
யோஷிதவை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கடந்த சனிக்கிழமை உத்தரவிட்டிருந்தார்.
இந்த முழு வழக்கும் ராஜபக்சவின் தாய் டெய்சி மகிந்தாவிற்கு தொடர்புடையதாகும். யோஷித தனது பாட்டியின் பெயரில் கல்கிசையில் ஒரு துண்டு காணியை வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
அந்த காணியை வாங்க பயன்படுத்தப்பட்ட பணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
யோஷித ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்குமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Yoshitha Rajapaksa, Yoshitha Rajapaksa Son Of Former President Mahinda Rajapaksa Arrested In Sri Lanka