மகிந்த ராஜபக்ச எங்கே இருக்கிறார்? உண்மையை உடைத்த இலங்கை பாதுகாப்பு செயலாளர்
இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச இருப்பிடத்தை நாட்டின் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன வெளிப்படுத்தியுள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த கமல் குணரத்ன கூறியதாவது, கொழும்பில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான அலரி மாளிகையை ஆயிரக்கணக்கான வன்முறை போராட்டகாரர்கள் முற்றுகையிட்டனர்.
வன்முறை போராட்டகாரர்களிடமிருந்து அவரை பாதுகாக்க நாங்கள் மகிந்த ராஜபக்சவை திருகோணமலைக்கு அழைத்துச் சென்றோம்.
அவருக்குப் போதிய பாதுகாப்பு அளிக்கப்படும், நிலைமை தணிந்ததும் விருப்பமான இடத்துக்குக் கொண்டு செல்லப்படுவார் என்று கமல் குணரத்ன உறுதியளித்து இருக்கிறார்.
இலங்கைக்கு போகாதீர்கள்..! பிரபல நாடு முக்கிய அறிவிப்பு
மேலும், இலங்கையில் முன்னாள் பிரதமர்களுக்கு வழங்கப்படும் உரிய பாதுகாப்பு மகிந்த ராஜபக்சவுக்கும் வழங்கப்படும் என கமல் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.