இலங்கைக்கு போகாதீர்கள்..! பிரபல நாடு முக்கிய அறிவிப்பு
இலங்கைக்கான பயண ஆலோசனையை ஓசியானியா நாடான நியூசிலாந்து மாற்றியுள்ளது.
உள்நாட்டு அமைதியின்மை மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கைக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு குடிமக்களுக்கு நியூசிலாந்து ஆலோசனை வழங்கியுள்ளது.
இலங்கைக்கான நியூசிலாந்து உயர் ஆணையர் மைக்கேல் ஆப்பிள்டன் தனது ட்விட்டர் பக்கத்தில் இலங்கைக்கான நியூசிலாந்தின் புதிய பயண ஆசோசனையை பகிர்ந்துள்ளார்.
அதில், இலங்கைக்கான அதன் பயண ஆலோசனையை நியூசிலாந்து மாற்றியுள்ளது.
இலங்கைக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை நியூசிலாந்து குடிமக்கள் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை பிரச்சனையில் சீனா தலையிட சஜித் பிரேமதாச அழைப்பு!
இலங்கையில் நிலவும் உள்நாட்டு அமைதியின்மை மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக பயண ஆலோசனை மாற்றப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை உள்ள நியூசிலாந்து குடிமக்கள், போராட்டங்கள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பெரிய கூட்டங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
New Zealand has revised its travel advisory for Sri Lanka.
— Michael Appleton (@michelappleton) May 11, 2022
We are now advising New Zealanders against undertaking non-essential travel to ?? due to recent civil unrest and the economic crisis in the country.
Full advice here: https://t.co/oM8U1pKF9q
ஏனெனில், இதன் போது வன்முறை வெடிக்க சாத்தியங்கள் இருப்பதால், உள்ளூர் அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு இணங்குமாறு நியூசிலாந்து வலியுறுத்தியுள்ளது.