இலங்கை பிரச்சனையில் சீனா தலையிட சஜித் பிரேமதாச அழைப்பு!
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார பிரச்சனையில் சீனா தலையிட நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமதாச அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று மே 11ம் திகதி இலங்கை எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகயா கட்சித்தலைவர் அலுவலகத்தில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இலங்கைக்கான சீன தூதர் Qi Zhenhong-ம் சந்திப்பில் ஈடுபட்டனர்.
இலங்கை தற்போது எதிர்கொண்டு வரும் சூழ்நிலை குறித்து இந்த சந்திப்பில் நீண்ட ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், சந்திப்பின் போது இலங்கையின் நிலவி நெருக்கடியான தருணத்தில் சகோதரத்துவத்தின் அடிப்படையில் உதவி கரங்களை நீட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சீனத் தூதுவருக்கு அழைப்பு விடுத்தாக கூறப்படுகிறது.
தனது நிர்வாகத்தில் நாட்டில் வெளிப்படையான ஆட்சி நடைபெறவும் மற்றும் லஞ்சம், ஊழல் மற்றும் அடக்குமுறையை ஒழிக்க முன்னுரிமை அளிக்கப்படும் என சஜித் கூறியுள்ளார்.

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்க பிரபல அரசியல் தலைவர் விருப்பம்! 
தற்போதைய நெருக்கடி நிலையிலிருந்து இலங்கை மீண்டு வர சீனாவின் உதவி அவசியம் மற்றும் சீன தூதர் தலையிட சஜித் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பின் போது எம்.பி. ஹர்ஷ டி சில்வாவும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.