இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்க பிரபல அரசியல் தலைவர் விருப்பம்!
இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விருப்பம் தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் எம்.பி. லக்சுமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
மே9ம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக அமைதியாக போராடி வந்தவர்கள் மீது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து நாடு முழுவதும் வன்முறை வெடித்தது.
இந்த வன்முறையை அடுத்து பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்தார். இதை இலங்கை மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
எனினும், ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டபய ராஜபக்ச விலக வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விருப்பம் தெரிவித்துள்ளதாக சமகி ஜன பலவேகயா கட்சி எம்.பி. லக்சுமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
ஆனால், ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டபய ராஜபக்ச ராஜினாமா செய்தால் மட்டுமே புதிய அரசாங்கத்தின் ஜனாதிபதியாக பதவியேற்க சஜித் பிரேமதாச விருப்பம் தெரிவித்துள்ளதாக லக்சுமன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
சஜித் விருப்பம் தெரிவித்தாலும் இலங்கை மக்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நிராகரிக்க வேண்டும்.. இலங்கை மக்களுக்கு அதிபர் கோட்டபய ராஜபக்ச விடுத்துள்ள வேண்டுகோள்