நிராகரிக்க வேண்டும்.. இலங்கை மக்களுக்கு அதிபர் கோட்டபய ராஜபக்ச விடுத்துள்ள வேண்டுகோள்
இனம் மற்றும் மத பிரிவினையை நோக்கி தள்ளும் நாசகார முயற்சிகளை இலங்கையர்கள் அனைவரும் நிராகரிக்க வேண்டும் என அதிபர் கோட்டபய ராஜபக்ச வலிறுத்தியுள்ளார்.
மே9ம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக அமைதியாக போராடி வந்தவர்கள் மீது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து நாடு முழுவதும் வன்முறை வெடித்தது.
இந்த வன்முறையில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 219 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேசமயம், ராணுவ ஆட்சிக்கு வழி வகுக்கும் வகையில் வன்முறையைத் தூண்டுவதற்கு நாசகாரர்கள் சதித்திட்டம் திட்டலாம் என்பதை கவனத்தில் கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், இனம் மற்றும் மத பிரிவினையை நோக்கி தள்ளும் நாசகார முயற்சிகளை நிராகரிக்க வேண்டும் என அதிபர் கோட்டபய ராஜபக்ச வலிறுத்தியுள்ளார்.
ராஜபக்ச தந்தையின் சிலையை தகர்த்தெறிந்த மக்கள்! வெளியான காணொளி
இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டதாவது, பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்களிலிருந்து மீண்டு வர அனைத்து இலங்கையர்களும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது.
இனம் மற்றும் மத பிரவினையை நோக்கி தள்ளும் நாசகார முயற்சிகளை இலங்கையர்கள் அனைவரும் நிராகரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நிதானம், சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வை ஊக்குவித்தல் மிக அவசியம் என கோட்டபய தெரிவித்துள்ளார்.