நொடிகளில் விற்றுத்தீர்ந்த BE 6 Batman Edition - Mahindra-வின் சாதனை
Mahindra-வின் BE 6 Batman Edition கார்கள் அறிமுகப்படுத்தப்பட்ட 135 நொடிகளில் விற்றுத்தீர்ந்துள்ளது.
மஹிந்திரா நிறுவனம் தனது BE 6 எலக்ட்ரிக் கார் மொடலில் Batman Edition எனும் சிறப்பு பதிப்பை ஆகஸ்ட் 14 அறிமுகப்படுத்தியது.
இது The Dark Knight Triology திரைப்படத் தொடரை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட மின்சார SUV ஆகும்.
ஆரம்பத்தில் 300 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த காருக்கு கிடைத்த பெரும் வரவேற்பால், தயாரிப்பு எண்ணிக்கை 999-ஆகி உயர்த்தப்பட்டது.
இந்த வாகனத்தின் விலை ரூ.27.79 லட்சம் (Ex-Showroom) ஆகும். இதன் விற்பனை ஆகஸ்ட் 23 காலை 11 மணிக்கு தொடங்கியது.
அதிர்ச்சியளிக்கும் வகையில், அனைத்து 999 யூனிட்களும் வெறும் 135 வினாடிகளில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மஹிந்திரா நிறுவனத்திற்கே ஒரு சாதனையாகும்.
இந்த edition-ல் இயந்திர ரீதியாக என்ற மாற்றமும் இல்லை. ஆனால், இந்த Batman Edition அதன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும்குறைந்த எண்ணிக்கையிலான தயாரிப்பு காரணமாக இது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
Mahindra BE 6 கார், மின்சார வாகன சந்தையில் மஹிந்திராவின் ப்ராண்டு மதிப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |