பிரித்தானிய சந்தையை குறிவைக்கும் மகிந்திரா - 3 மின்சார SUV-களை அறிமுகப்படுத்த திட்டம்
Mahindra Eyes UK Launch with Three Electric SUVs: பிரித்தானியாவில் 3 புதிய மின்சார SUV-களை அறிமுகப்படுத்த மகிந்திரா திட்டமிட்டுள்ளது.
3 மின்சார SUV-களை அறிமுகப்படுத்த திட்டம்
இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றான Mahindra & Mahindra, பிரித்தானிய கார் சந்தையில் மீண்டும் களமிறங்குவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
நிறுவனத்தின் புதிய மின்சார வாகனங்களான BE 6, XEV 9e மற்றும் BE 07 ஆகிய மூன்று மின்சார SUV மாடல்களை அங்கு அறிமுகப்படுத்தும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Mahindra BE 6 Model
பிரித்தானிய வாடிக்கையாளர்களின் விருப்பம், சந்தை வாய்ப்பு மற்றும் விலை நிர்ணயத்தைக் கண்டறியும் நோக்கில் மகிந்திரா ஏற்கனவே அந்நாட்டில் வாடிக்கையாளர் ஆய்வுகளை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் BE 6 மாடலே மகிந்திராவின் பிரித்தானிய மின்சார வாகன அறிமுகத்தை வழிநடத்தும் முக்கிய மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகிந்திரா நிறுவனம் 2022-ஆம் ஆண்டிலேயே பிரித்தானிய சந்தையில் மீண்டும் நுழைய ஆர்வம் தெரிவித்திருந்தது. அதே ஆண்டு, இங்கிலாந்தில் தனது Mahindra Advanced Design Europe (M.A.D.E) வடிவமைப்பு மையத்தை திறந்து, எதிர்கால மின்சார SUV வரிசையையும் வெளிப்படுத்தியது.
இந்தியா-பிரித்தானியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) அமுலுக்கு வந்திருப்பது மகிந்திராவின் ஏற்றுமதி திட்டங்களுக்கு கூடுதல் ஊக்கமாக அமைந்துள்ளது.
மகிந்திரா ஆட்டோமொட்டிவ் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி நளினிகாந்த் கொல்லகுண்டா, பிரித்தானிய சந்தை நிறுவனத்தின் அடுத்த முக்கிய இலக்காக இருப்பதாகவும், 18 முதல் 24 மாதங்களுக்குள் அங்கு நுழையத் திட்டமிட்டுள்ளதாகவும் முன்பு தெரிவித்திருந்தார். எனினும், பிரித்தானியாவில் நடைமுறையில் உள்ள கடுமையான இணையப் பாதுகாப்பு மற்றும் மென்பொருள் புதுப்பிப்பு விதிமுறைகள் காரணமாக அறிமுகத் திட்டம் 2027-க்கு பதிலாக 2028-ஆம் ஆண்டுக்கு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ரூ.1 கோடியில் உருவான இராவணன் சிம்மாசனம்: 24 காரட் தங்க அலங்காரம் - ராமாயணம் படக்குழுவின் பிரம்மாண்ட சாதனை
இங்கிலாந்தில் வடிவமைப்பு மையம்
அந்நாட்டில் விற்பனை செய்யப்படும் மின்சார வாகனங்கள் UN R155 மற்றும் UN R156 பாதுகாப்பு தரநிலைகளை பூர்த்தி செய்ய வேண்டியது கட்டாயமாக உள்ளது. மகிந்திராவுக்கு இங்கிலாந்தில் ஏற்கனவே வடிவமைப்பு மையம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்க பலமாக பார்க்கப்படுகிறது.
மேலும், 2016-ஆம் ஆண்டு e2o மின்சார கார் மூலம் பிரித்தானிய சந்தையில் நுழைந்த அனுபவமும் நிறுவனத்துக்கு உள்ளது. அப்போது விற்பனை எதிர்பார்த்த அளவில் அமையாததால் அந்த முயற்சி நிறுத்தப்பட்டது. தற்போது புதிய மின்சார SUV வரிசையுடன் மீண்டும் அதிரடி வருகைக்குத் தயாராகி வருகிறது.
வெறும் 15 டொலர் செலவில் 2.5 பில்லியன் டொலர் கிரிப்டோ திருட்டு - Binance ஹேக்கில் அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |