மஹிந்திராவின் புதிய மின்சார SUV XEV 9S அறிமுகம்
மஹிந்திரா நிறுவனம் தனது நான்காவது மின்சார SUV-யான XEV 9S-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
XUV400, BE 6, XEV 9e ஆகியவற்றுக்குப் பிறகு வந்துள்ள இந்த புதிய மாடல், INGLO பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு, குடும்பத்திற்கேற்ற 7 சீட்டர் வசதியுடன் வருகிறது.
விலை விவரம் (எக்ஸ்-ஷோரூம்):
Pack One Above 59kWh – ரூ.19.95 லட்சம்
Pack One Above 79kWh – ரூ.21.95 லட்சம்
Pack Two Above 59kWh – ரூ.24.45 லட்சம்
Pack Two Above 79kWh – ரூ.25.45 லட்சம்
Pack Three 79kWh – ரூ.27.35 லட்சம்
Pack Three Above 79kWh – ரூ.29.45 லட்சம்

வடிவமைப்பு
XEV 9S, XEV 9e-யின் வடிவமைப்பை ஒத்ததாக இருந்தாலும், XUV700-ஐ நினைவூட்டும் தோற்றத்துடன் வருகிறது.
L-வடிவ LED DRLs, triangular cluster LED ஹெட்லைட்கள், மூடப்பட்ட கிரில், ஒளிரும் Mahindra லோகோ ஆகியவை முக்கிய அம்சங்கள்.
18-இன்ச் அலாய் வீல்கள், 527 லிட்டர் பூட் ஸ்பேஸ், 150 லிட்டர் frunk ஆகியவை கூடுதல் வசதிகளை வழங்குகின்றன.
உள்ளமைப்பு (Interior)
மூன்று 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்கள் கொண்ட டாஷ்போர்டு, பனோரமிக் சன்ரூஃப், 16-ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் ஆடியோ, 540 டிகிரி Camera, AR ஹெட்அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் Android Auto/Apple CarPlay ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு
6 ஏர்பேக், ABS, ESC, ஹில் அசிஸ்ட், ISOFIX, ADAS Level-2 வசதிகள் ஆகியவை பாதுகாப்பை வலுப்படுத்துகின்றன.
செயல்திறன்
59kWh, 70kWh, 79kWh பேட்டரி விருப்பங்களுடன், அதிகபட்சம் 286 PS பவர், 380 Nm டார்க், 679 கிமீ வரை MIDC ரேஞ்ச், 0-100 கிமீ வேகம் 7 விநாடிகளில் அடையும் திறன் கொண்டது.
20 நிமிடங்களில் 20-80 சதவீதம் வரை வேகமாக சார்ஜ் செய்யும் வசதி உள்ளது.
விற்பனை
டெஸ்ட் டிரைவ் 2025 டிசம்பர் 5 முதல் தொடங்குகிறது. முன்பதிவு 2026 ஜனவரி 14 முதல், வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் ஜனவரி 23 முதல் நடைபெறும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |