பிரித்தானியாவிற்கு மின்சார கார்களை ஏற்றுமதி செய்ய Mahindra திட்டம்
Mahindra & Mahindra நிறுவனம், இந்தியா-பிரித்தானியா இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் (FTA) வாயிலாக, இந்தியாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களை பிரித்தானியாவிற்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையிலான இந்த வர்த்தக ஒப்பந்தம் பல துறைகளில் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.
2030-க்குள் மஹிந்திரா நிறுவனம் அதன் மொத்த வாகன விற்பனையில், 30 சதவீதம் மின்சார வாகனங்களாக இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறது.
2022-ல் இங்கிலாந்தின் Oxfordshire-ல் Bandbury நகரில் Mahindra Advanced Design Europe (M.A.D.E) என்ற மையத்தை நிறுவியது. இது மின்சார வாகனங்களின் வடிவமைப்பிற்கான முக்கிய மையமாக செயல்படுகிறது.
பிரித்தானிய மின்சார வாகன சந்தையில், Tesla, Vinfast போன்ற நிறுவனங்களுடன் போட்டியிரும் வாய்ப்பாக இந்த வர்த்தக ஒப்பந்தத்தை மஹிந்திரா பார்க்கிறது.
இதன் மூலம், மஹிந்திரா நிறுவனம் தனது மின்சார வாகனங்களை உலக சந்தையில் நிலைநிறுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Mahindra EV Export UK, India UK FTA 2025, Mahindra Electric Vehicles, MADE design center in UK, Tesla vs Mahindra UK, Mahindra Tesla Vinfast, EV Cars