ரூ.13.89 லட்சம் முதல் மஹிந்திரா XUV 3XO EV அறிமுகம்
மஹிந்திரா நிறுவனம் தனது புதிய XUV 3XO EV மின்சார SUV-யை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ரூ.13.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையிலிருந்து தொடங்கும் இந்த மொடல், இதற்குமுன் இருந்த XUV400 EV-க்கு மாற்றாக வந்துள்ளது.
XUV 3XO EV முக்கிய அம்சங்கள்:
- 39.4kWh பேட்டரி மற்றும் ஒற்றை மின்மோட்டார் - 147 bhp சக்தி, 310 Nm டார்க்.
- ஒரே சார்ஜில் 285 கி.மீ. பயண திறன்.
- Level 2 ADAS, 360 டிகிரி Camera, பனோரமிக் சன்ரூஃப், Harman Kardon 7 ஸ்பீக்கர் சிஸ்டம்.
- 65W Type-C சார்ஜிங், குளிரூட்டும் க்ளோவ் பாக்ஸ், மென்மையான லெதரெட் டிரிம்கள்.

வெளிப்புற வடிவமைப்பு:
ரோஸ் கோல்ட் கிரில் இன்சர்ட்ஸ், 17-இன்ச் டயமண்ட் கட் அலாய் வீல்கள், LED பனிமூட்ட விளக்குகள், EV பேட்ஜ்.
சிவப்பு நிற மொடலில் தனிப்பட்ட ரெட் இன்சர்ட்ஸ்.
விலை & வேரியண்ட்ஸ்:
- AX5 வேரியண்ட் - ரூ.13.89 லட்சம்
- AX7L வேரியண்ட் வேரியண்ட் - ரூ.14.96 லட்சம்
- 7.2kW சார்ஜர் வேரியண்ட் - கூடுதல் ரூ.50,000
மஹிந்திரா XUV 3XO EV, Tata Nexon EV-க்கு நேரடி போட்டியாளராக வருகிறது.
பிப்ரவரி 23, 2026 முதல் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி தொடங்கும் என நிறுவனம் அறிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Mahindra XUV 3XO EV price, XUV 3XO EV launch India 2026, Mahindra electric SUV features, XUV 3XO EV vs Tata Nexon EV, Mahindra EV deliveries February 2026, XUV 3XO EV range 285 km, Mahindra AX5 AX7L variants, Mahindra EV charging options, XUV 3XO EV specifications, Mahindra electric car India market