ஆட்டமிழக்காமல் 169 ஓட்டங்கள்! அயர்லாந்தை கதிகலங்க வைத்த 24 வயது வீரர்
அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்டின் இரண்டாம் நாள் முடிவில் வங்காளதேசம் 338 ஓட்டங்கள் குவித்துள்ளது.
286 ஓட்டங்கள்
வங்காளதேசம் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சில்ஹெட்டில் நடந்து வருகிறது. 
நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 286 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
ஸ்டிர்லிங் 60 ஓட்டங்களும், கார்மைக்கேல் 59 ஓட்டங்களும், கேம்பர் 44 ஓட்டங்களும் எடுத்தனர். மெஹிதி ஹசன் மிராஸ் 3 விக்கெட்டுகளும், டைஜூல், ஹசன் முராத் மற்றும் ஹசன் மஹ்முத் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
மஹ்முதுல் சதம்
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்காளதேச அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 338 ஓட்டங்கள் குவித்தது.
மஹ்முதுல் ஹசன் ஜாய் (Mahmudul Hasan Joy) 169 ஓட்டங்களுடனும் (4 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகள்) மொமினுள் ஹயூ 80 ஓட்டங்களுடனும் (2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்) களத்தில் உள்ளனர். ஷத்மான் இஸ்லாம் 104 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 80 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |