வங்காளதேச அணிக்கு விழுந்த அடுத்த இடி! ஓய்வை அறிவித்த முக்கிய வீரர்
வங்காளதேச அணியின் மூத்த வீரர் மஹ்முதுல்லா ரியாத் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அனுபவ வீரர்
இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் வங்காளதேச அணி விளையாடி வருகிறது. குவாலியரில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி டெல்லியில் நாளை நடைபெற உள்ளது.
இந்நிலையில் வங்காளதேச அணியின் அனுபவ வீரர் மஹ்முதுல்லா ரியாத் (Mahmudullah Riyad) டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மஹ்முதுல்லா
சமீபத்தில் மூத்த வீரர் ஷாகிப் அல் ஹசன் (Shakib Al Hasan) டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த சில வாரங்களில் மஹ்முதுல்லாவின் இந்த முடிவு வங்காளதேச அணிக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
எனினும், ஷாகிப் மற்றும் மஹ்முதுல்லா இருவரும் 2025 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
139 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள மஹ்முதுல்லா 2,394 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 8 அரைசதங்கள் அடங்கும். அத்துடன் 40 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.
மேலும், வங்காளதேச அணிக்காக டி20யில் அதிக ஓட்டங்கள் எடுத்த இரண்டாவது வீரர் மஹ்முதுல்லா என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |