எம்.பி பதவியிலிருந்து மஹுவா மொய்த்ரா நீக்கம்.. லஞ்சம் பெற்ற புகாரில் நடவடிக்கை
மக்களவையில் இருந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
லஞ்சம் பெற்றதாக புகார்
மக்களவையில் அதானி குழுமத்துக்கு எதிராக கேள்வி எழுப்ப, தொழிலதிபா் ஒருவரிடம் இருந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றதாக, பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மக்களவை தலைவர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தார்.
இதனை, மக்களவை நெறிமுறைகள் குழுவுக்கு ஓம் பிர்லா பரிந்துரை செய்தார். அதனடிப்படையில், நாடாளுமன்ற குழுவானது விசாரித்து வந்தது.
பதவி நீக்கம்
பின்னர், இந்த குழுவானது மஹுவா மொய்த்ராவை எம்.பி பதவியில் இருந்து நீக்க பரிந்துரைத்து அறிக்கை தயார் செய்தது. இதனையடுத்து, குழுவின் தலைவா் வினோத் குமாா் சோன்கா் அறிக்கையை இன்று (டிச.8) மக்களவையில் தாக்கல் செய்தார்.
பின்பு, அறிக்கையை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, மஹுவா மொய்த்ராவை நீக்கம் செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, குரல் வாக்கெடுப்பு மூலமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து, மக்களவையில் இருந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா நீக்கம் செய்வதாக ஓம்.பிர்லா அறிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |