22 பேர்களை பலிவாங்கிய துப்பாக்கிதாரியின் அடையாளம் தெரிந்தது: வெளிவரும் புதிய தகவல்
அமெரிக்காவில் மைனே மாகாண மக்களை மொத்தமாக நடுக்கத்தில் ஆழ்த்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய நபரின் அடையாளம் தெரிய வந்துள்ளது.
மாகாணம் மொத்தம் பீதியில்
குறித்த துப்பாக்கிச் சூட்டில் 22 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 60 பேர்கள் வரையில் காயங்களுடன் தப்பியுள்ளனர். சம்பவயிடத்தில் இருந்து மாயமாகியுள்ள துப்பாக்கிதாரியை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
@afp
துப்பாக்கிச் சூடு நடந்த Lewiston நகரில் கடைகள் அடைக்கப்பட்டு, வீடுகளின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் அனைத்தும் பூட்டப்பட்ட நிலையில் உள்ளன.
ஒரு பொழுதுபோக்கு மையம், ஒரு பந்துவீச்சு மையம், மற்றும் ஒரு மதுபான விடுதி ஆகியவற்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகும் மாகாணம் மொத்தம் பீதியில் உறைந்துள்ளது.
ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு
இந்த நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 40 வயதான Robert Card என்பதை அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளனர்.
@afp
மேலும், அவர் ஒரு பயிற்சி பெற்ற துப்பாக்கி பயிற்றுவிப்பாளர் எனவும், அமெரிக்க இராணுவ ரிசர்வ் உறுப்பினர் எனவும், அவர் 20 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றி இந்த ஆண்டு தொடக்கத்தில் ஓய்வு பெற்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
மட்டுமின்றி, கோடையில் அவர் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |