பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கத்தில் மைத்திரிபால கட்சி அங்கம் வகிக்குமா? எடுக்கப்பட்ட முக்கிய முடிவு
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் எந்தவொரு அமைச்சுப் பதவியையும் ஏற்காதிருக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானம் எடுத்துள்ளது.
இந்த தகவலை அக்கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் புதிய பிரதமர் ரணில் மக்களுக்காக எடுக்கும் முதல் அதிரடி நடவடிக்கை! இதுதான் அவரின் திட்டம்
அதன்படி ரணில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கவோ அல்லது எவ்வித அமைச்சுப் பதவிகளை ஏற்கவோ மாட்டோமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்தியக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போதே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.