2024 அக்டோபர் மாதத்தில் பிரான்சில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள்
பிரான்சில், 2024ஆம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில் சில முக்கிய மாற்றங்கள் நிகழவிருக்கின்றன. அவை குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
புதிய பிரதமர் உரை
பிரான்சின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மிஷெல் பார்னியேர், தங்கள் அரசின் பொதுக்கொள்கை குறித்து அக்டோபர் மாதம் 1ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்ற இருக்கிறார்.
அந்த உரையில்தான், புதிய அரசு என்னென்ன திட்டங்கள் வைத்துள்ளது என்பது தெரியவரும்.
வேலைநிறுத்தம்
பிரான்ஸ் யூனியன்கள் பல, அக்டோபர் மாதம் 1ஆம் திகதி ஓய்வூதிய திட்டத்தை மாற்றுவது முதலான விடயங்கள் தொடர்பில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளன.
EasyJet நிறுவனம் வேலைநிறுத்தம்
EasyJet நிறுவனத்தின் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் யூனியன்கள், வேலைநிறுத்தம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளன.
ஆனால், என்ன திகதியில் வேலைநிறுத்தம் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.
Bordeaux விமான நிலையத்தை விட்டு வெளியேறும் Ryanair
பட்ஜெட் விமான நிறுவனம் என அழைக்கப்படும் Ryanair விமான நிறுவனம், அப்டோபர் மாதம் 27ஆம் திகதி முதல், பிரான்சின் Bordeaux விமான நிலையத்திலிருந்து செயல்படப்போவதில்லை என அறிவித்துள்ளது.
இதனால், பல விமான சேவைகள், குறிப்பாக, பிரித்தானியாவுக்கும் தென்மேற்கு பிரான்சுக்கும் இடையிலான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட உள்ளன.
கிறிஸ்துமஸ் ரயில் டிக்கெட்கள் விற்பனை
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிவரும் நிலையில், பிரான்ஸ் ரயில்வே நிறுவனங்களில் விழாக்கால டிகெட் விற்பனை அக்டோபர் 2ஆம் திகதி முதல் துவங்க உள்ளது.
பட்ஜெட்
பிரான்ஸ் பட்ஜெட், அக்டோபர் மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. புதிய நிதித்துறை அமைச்சரான Antoine Armand பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.
Francophonie உச்சி மாநாடு
பிரான்சில், இரண்டு ஆண்டுகளுக்கொருமுறை 'summit of La Francophonie' என்னும் பிரெஞ்சு மொழி பேசும் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு ஒன்று நடைபெறுவதுண்டு.
இந்த ஆண்டு, அந்த மாநாடு அக்டோபர் மாதம் 4ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
தாமதமாகும் அரசு உதவி ஒன்று
பிரான்ஸ் அரசு வழங்கும் உதவியான CAF benefits என்னும் உதவி, வழக்கமாக 5ஆம் திகதி வழங்கப்படும் நிலையில், அக்டோபரில் சிறிது தாமதமாக 7ஆம் திகதியன்று வழங்கப்பட உள்ளது.
கோவிட் மற்றும் ப்ளூ தடுப்பூசி வழங்கல்
அக்டோபர் மாதம் 15ஆம் திகதி முதல் பிரான்சில் கோவிட் மற்றும் ப்ளூ தடுப்பூசிகள் வழங்கல் துவக்கப்பட உள்ளது.
சொத்துவரி
பிரான்சில் சொத்துவரி செலுத்துவோர் ஒன்லைனில் வரி செலுத்த கடைசி நாள், அக்டோபர் மாதம் 20ஆம் திகதி ஆகும்.
கசோலைகள், ரொக்கம் வாயிலாக வரி செலுத்துவோர் வரி செலுத்த கடைசி நாள், அக்டோபர் 15ஆம் திகதி ஆகும்.
பள்ளிகள் விடுமுறை
அக்டோபர் மாதம் 19ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 4ஆம் திகதி வரை, பிரான்சில் அனைத்து வயதுடைய பள்ளி மாணவ மாணவியருக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
பின்னோக்கித் திரும்பும் கடிகாரங்கள்
பிரான்சில், அக்டோபர் மாதம் 27ஆம் திகதி, daylight saving time முடிவுக்கு வருகிறது.
கல்வி நிதி உதவி
குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களிலுள்ள பிள்ளைகளுக்கு மதிய உணவு, புத்தகங்கள் மற்றும் பிற பொருட்கள் வாங்குவதற்காக வழங்கப்படும் நிதியுதவிக்கு, அக்டோபர் மாதம் 17ஆம் திகதி வரை ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |