கடலில் மூழ்கவுள்ள முக்கிய நகரம் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
அதிகரித்து வரும் கடல் மட்டத்தினால் சில முக்கிய நகரங்கள் கடல் நீரினால் மூழ்கி வருவதாக நாசா எச்சரித்துள்ளது.
கடலில் மூழ்கவுள்ள முக்கிய நகரம்
அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையின் கடல் மட்டம் அதிகரித்து வருவதால் முக்கிய நகரங்கள் சில மூழ்கி வருவதாக நாசா தெரிவித்துள்ளது.
வர்ஜீனியா டெக்கின் புவி கண்காணிப்பு மற்றும் கண்டுபிடிப்பு ஆய்வகத்தில் பணியில் இருக்கும் சில விஞ்ஞானிகள் புவியியல் பிரச்சினையானது கடற்கரையில் உள்ள மக்கள் நம்பியுள்ள உள்கட்டமைப்பு, விளைநிலங்கள் மற்றும் ஈரநிலங்களை அச்சுறுத்தும் அளவுக்கு வேகமாக நடக்கிறது என்று கண்டறிந்துள்ளனர்.
செயற்கைக்கோள் தரவு மற்றும் ஜிபிஎஸ் சென்சார்களை ஆய்வு செய்ததன் மூலம், நோர்போக், பால்டிமோர், நியூயார்க் மற்றும் வர்ஜீனியா போன்ற முக்கிய நகரங்கள் மூழ்கிய நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக கண்டறிந்துள்ளனர்.
2007 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்குள் சராசரியாக 1 முதல் 2 மில்லிமீட்டர் வரை நிலம் மூழ்கியுள்ளது.
டெலாவேர், மேரிலாந்து, தென் கரோலினா மற்றும் ஜார்ஜியாவில் உள்ள சில மாவட்டங்களும் இரண்டு அல்லது மூன்று மடங்கு வேகத்தில் மூழ்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.
சதுப்பு நிலங்களில் உள்ள நிலம் ஒவ்வொரு ஆண்டும் 3 மில்லிமீட்டருக்கும் அதிகமாக மூழ்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
காடுகளும் உப்பு நீர் ஊடுருவல் மற்றும் வடிகால் நிலம் ஆகியவற்றால் இடம்பெயர்ந்துள்ளன.
நெடுஞ்சாலைகள் மற்றும் விமான நிலையங்களை உள்ளடக்கிய ஏறக்குறைய 8,97,000 கட்டமைப்புகள் குறைந்து வரும் நிலத்தில் உள்ளன.
நாசால் உருவாக்கப்பட்ட வரைப்படத்தின் மூலம் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு பின்வாங்கத் தொடங்கிய லாரன்டைட் பனிக்கட்டியால் ஏற்பட்ட பாதிப்பால் மத்திய-அட்லாண்டிக் பகுதி மேலும் மூழ்கி அப்பகுதியை கீழே மூழ்கடித்தாக கண்டறிந்துள்ளனர்.
மேலும் மூழ்கும் நிலம் பல முக்கிய நகரங்களில் உள்கட்டமைப்பை பாதிக்கிறது, இதனால் வெள்ளம் மற்றும் பிற கடலோர ஆபத்துகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என விஞ்ஞானி ஒஹென்ஹென் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |