காருடன் குழந்தை கடத்தப்பட்ட வழக்கில் முக்கிய திருப்பம்
அமெரிக்க நகரமொன்றில் ஒன்பது மாதக் குழந்தை ஒன்று காருடன் மாயமான வழக்கில் பொலிசார் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.
காருடன் மாயமான குழந்தை
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்திலுள்ள Parrish என்னுமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று மாயமான விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பரபரப்புக்கு முக்கிய காரணம், காருக்குள் ஹார்லோ (Harlow Darby Freeman) என்னும் ஒன்பது மாதக் குழந்தையும் இருந்ததுதான்.
உடனடியாக பொலிசாருக்கு தகவலளிக்கப்பட, ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டு பொலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள்.
திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் குழந்தை ஹார்லோ காணாமல்போன நிலையில், மறுநாள் காலை, அதாவது, செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில், அந்தக் கார் புதர்கள் அடர்ந்த ஒரு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக ஹார்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். மருத்துவப் பரிசோதனையில் அவளுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என தெரியவந்தது.
பொலிசார் தெரிவித்துள்ள தகவல்
அந்தக் கார் குழந்தையுடன் கடத்தப்பட்டதாக கருதித்தான் பொலிசார் குழந்தையையும் காரையும் தேடிவந்தார்கள். ஆனால், குழந்தை கிடைத்தபிறகு, அந்தக் குழந்தை கடத்தப்படவே இல்லையோ என்னும் ஒரு சந்தேகம் எழுந்துள்ளது.
Image: Parrish Police Department / Facebook
அதாவது, குழந்தையுடன் காரை தன் நண்பர் வீட்டின் முன் நிறுத்திய குழந்தையின் தந்தை, அதன் கை பிரேக்கை போடாமலே சென்றிருக்கக்கூடும் என பொலிசார் சந்தேகிக்கிறார்கள்.
சரியாக பார்க் செய்யப்படாத அந்தக் கார், தானாக பின்னோக்கி நகர்ந்து அந்த புதர்களுக்குள் சென்று சிக்கிக்கொண்டிருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.
Image: Facebook
ஆக, குழந்தை கிடைத்ததையடுத்து ஆம்பர் எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது. ஆனாலும், என்ன நடந்தது என்பதை அறிவதற்காக, பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Image: Facebook/abc3340
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |