ஜேர்மன் சேன்ஸலருக்கு மக்களிடையே குறைந்துவரும் ஆதரவு
Majority of Voters Predict Early Exit for Chancellor Merz: ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் விரைவில் பதவி விலகுவார் எனப் பெரும்பான்மையான வாக்காளர்கள் கணித்துள்ளனர்.
ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸுக்கு மக்களிடையே ஆதரவு குறைந்துவருகிறது.
ஆய்வு முடிவுகள்
YouGov என்னும் ஆய்வமைப்பு சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வொன்றில், சேன்ஸலர் மெர்ஸ், 2029ஆம் ஆண்டு நிகழவிருக்கும் பொதுத்தேர்தலுக்கு முன் பதவி விலகிவிடுவார் என கருதுவதாக பெரும்பான்மையான வாக்காளர்கள் கணித்துள்ளனர்.

36 சதவிகித வாக்காளர்கள், மெர்ஸ் 2026ஆம் ஆண்டு முடியும் வரை சேன்ஸலராக இருப்பார் என்றும், என்றாலும், 2029ஆம் ஆண்டு நிகழவிருக்கும் பொதுத்தேர்தலுக்கு முன் அவர் பதவி விலகிவிடுவார் என்றும் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்கள்.
ஆய்வில் பங்கேற்றவர்களில் 18 சதவிகிதம் பேர், இந்த ஆண்டு முடியும் முன்பே அவருக்கு பதிலாக வேறொருவர் சேன்ஸலராவார் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார்கள்.
29 சதவிகிதம் பேர், அடுத்த தேர்தல் வரையாவது அவர் சேன்ஸலராக இருப்பார் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார்கள்.
மொத்தத்தில், 54 சதவிகிதம் பேர், இந்த நாடாளுமன்ற பதவிக்காலம் முடியும் முன் மெர்ஸ் பதவி விலகிவிடுவார் என கணித்துள்ளார்கள்.
அத்துடன், மெர்ஸ் சமீபத்தில் தனது கேபினட்டில் மாற்றங்கள் செய்த நிலையிலும், தனது அதிகாரத்தை வலுப்படுத்தத் தவறிவிட்டதாக பெரும்பாலான மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், அடுத்து யார் சேன்ஸலராவார் என கேட்கப்பட்ட நிலையில், மெர்ஸின் CDU கட்சியைச் சார்ந்த, North Rhine-Westphalia மாகாண பிரீமியரான Hendrik Wüst என்பவரே அடுத்து சேன்ஸலராக பொருத்தமான நபர் என கருதுவதாக 25 சதவிகித மக்கள் தெரிவித்துள்ளனர்.
மெர்ஸே சேன்ஸலராக தொடர்வார் என 9 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ள நிலையில், 66 சதவிகிதம் பேர், அடுத்து யார் சேன்ஸலராவார் என தங்களுக்குத் தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |