திடீரென இடிந்த இலங்கை மைதான மேற்கூரை! அதிர்ஷ்டவசமாக தப்பிய வீரர்கள்
காலே கிரிக்கெட் மைதானத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இலங்கை-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடந்து வருகிறது.
இலங்கை அணி 212 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனதைத் தொடர்ந்து, அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.
ஒரு கட்டத்தில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது காற்று பலமாக வீசியதால் மைதானத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
அதேபோல் மைதானத்தில் இருந்த பெரிய கண்ணாடி சுவரும் திடீரென கீழே விழுந்தது. அப்போது வீரர்கள் யாரும் அங்கு இல்லாததால் சேதம் தவிர்க்கப்பட்டது.
எனினும் இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் மழை நின்றதால் ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது.