"மேக்கப் உண்ணும் அழகி” என்ற இன்ஃப்ளூயன்சர் மர்ம மரணம்: விபரீதத்தில் முடிந்ததா புதிய முயற்சி!
"மேக்கப் உண்ணும்" இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் குவா சூய்சூய்-யின் மர்ம மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் மரணம்
தைவானை சேர்ந்த பிரபல அழகியல் இன்ஃப்ளூயன்ஸர் குவா சூய்சூய், தனது 24 வயதில் திடீரென உயிரிழந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'மேக்கப் சாப்பிடும் அழகி' என்று அறியப்பட்ட இவரது மரணம், மே 24 அன்று அறிவிக்கப்பட்ட நிலையில், இவரது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் மத்தியில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
இணையத்தில் பிரபலமானவர்கள் பலர் வழக்கத்திற்கு மாறான வீடியோக்களை உருவாக்கி வெளியிடுகின்றனர். குவா சூய்சூய் அத்தகைய ஒருவர்தான். லிப்ஸ்டிக், பிளஷ், ஃபேஸ் மாஸ்க் போன்ற பல்வேறு ஒப்பனைப் பொருட்களைச் சாப்பிட்டு வீடியோக்களை வெளியிட்டதன் மூலம் அவர் பெரும் பின்தொடர்பவர்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சைக்குரிய உள்ளடக்கம்
ரசாயனம் கலந்த ஒப்பனைப் பொருட்களை அவர் தொடர்ந்து உட்கொண்டதே அவரது அகால மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்றும், அது அவரது உடலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் பலர் இப்போது கூறி வருகின்றனர்.
இருப்பினும், சிலர் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் ஊகிக்கின்றனர்.
சர்ச்சையை ஏற்படுத்திய ஒரு குறிப்பிட்ட வீடியோவில், குவா சூய்சூய் ஜெல்லி போன்ற பிளஷை தனது கன்னங்கள் மற்றும் உதடுகளில் தடவிக்கொண்டு, பின்னர் ஒரு கரண்டியால் அதை எடுத்து தனது வாயில் போட்டு மெல்லத் தொடங்கினார். அதன் சுவை நன்றாக இல்லை என்று ஒப்புக்கொண்டாலும், அதன் அமைப்பு "மொறுமொறுப்பாக" மற்றும் "ஜெல்லி" போல இருப்பதாக அவர் விவரித்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |