Malai chicken gravy: நாவூறும் சுவையில் மலாய் சிக்கன் கிரேவி: ரெசிபி இதோ
இனி வீட்டில் சிக்கன் எடுத்தால் இந்த மலாய் சிக்கன் கிரேவி செய்து சாப்பிட்டு பாருங்கள்.
இந்த மலாய் சிக்கன் கிரேவி இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம், பூரி, சப்பாத்தி, சாதம் என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் மலாய் சிக்கன் கிரேவி எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்
- சிக்கன்- ½kg
- வெள்ளை மிளகு தூள்- 1 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- வெங்காயம்- 2
- எண்ணெய்- தேவையான அளவு
- முந்திரி- 12
- பச்சைமிளகாய்- 3
- கிராம்பு- 4
- ஏலக்காய்- 4
- மிளகு- ½ ஸ்பூன்
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
- மல்லி தூள்- 1 ஸ்பூன்
- கரம் மசாலா- 1 ஸ்பூன்
- ஜாதிக்காய் தூள்- ¼ ஸ்பூன்
- தயிர்- 3 ஸ்பூன்
- பிரெஷ் கிரீம்- 4 ஸ்பூன்
- வெண்ணெய்- 1 ஸ்பூன்
- கஸ்தூரி மேத்தி- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனில் வெள்ளை மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம், முந்திரி, பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின் இதனை ஆறவைத்து மிக்ஸி ஜாரில் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
வாணலில் எண்ணெய் சேர்த்து அதில் கிராம்பு, ஏலக்காய், மிளகு சேர்த்து பொரிந்ததும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
அடுத்து வதக்கி அரைத்த மசாலாவை சேர்த்து 10 நிமிடம் வதக்கியதும் இதில் ஊறவைத்த சிக்கன் சேர்த்து 10 நிமிடம் நன்கு வதக்கவும்.
பின் இதில் மல்லி தூள், கரம் மசாலா, ஜாதிக்காய் தூள், வெள்ளை மிளகு தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
இதனைத்தொடர்ந்து அதில் தயிர் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சிக்கனை 30 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேகவைக்கவும்.
அடுத்து இதில் பிரெஷ் கிரீம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிட்டு பின் வெண்ணெய் மற்றும் கஸ்தூரி மேத்தி சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான மலாய் சிக்கன் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |