இன்று நள்ளிரவு முதல் போர்நிறுத்தம் அமுல்! நிபந்தனையின்றி ஒப்புக்கொண்ட தாய்லாந்து, கம்போடியா
தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளுக்கு இடையிலான போர்நிறுத்தம் இன்று அமுலுக்கு வருகிறது.
பலி எண்ணிக்கை
கம்போடியா, தாய்லாந்து நாடுகளுக்கு இடையிலான மோதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக, இப்பிரச்சனைக்கு தீர்வு காண இருதரப்பு தலைவர்களும் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். ஆனால், இதில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.
இந்த நிலையில், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.
போர்நிறுத்தம்
அவர் மலேசியாவில் இருந்து இருநாடுகளுக்கும் சமாதானம் செய்யும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அதன் முடிவில் கம்போடியா மற்றும் தாய்லாந்து நாடுகள் பொதுவான புரிதலுக்கு வந்ததாக அன்வர் செய்தி வெளியிட்டுள்ளார்.
இதன்படி, இரு நாடுகளும் உடனடி மற்றும் நிபந்தனையின்றி போர்நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளன என்றும், இன்று நள்ளிரவு முதல் இது அமுலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |