'உள்ளாடை விளம்பரங்களை நிறுத்துங்கள்' பிரபல நாட்டில் தொலைகாட்சி ஒளிபரப்பாளர்களுக்கு எச்சரிக்கை!
மலேசியாவில் உள்ளூர் ஷாப்பிங் நிகழ்ச்சிகளில் உள்ளாடைகளைக் காண்பிக்கக் கூடாது என்று உள்ளூர் தொலைகாட்சி ஒளிபரப்பாளர்ககளுக்கு எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின், இரண்டு உள்ளூர் தொலைகாட்சி ஒளிபரப்பாளர்களுக்கு, அவர்களது நிகழ்ச்சிகளில் உள்ளாடை விளம்பரங்கள் ஒளிபரப்புவதை உடனே நிறுத்துமாறு திரைப்பட தணிக்கை ஆணையம் (LPF) அறிவுறுத்தியுள்ளது.
அதன் தொடர்பில், திரைப்பட தணிக்கை ஆணையம் எழுத்துபூர்வ உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அதில், ஆணோ, பெண்ணோ - மனிதர்கள் உள்ளாடை அணிந்திருப்பது போன்ற காட்சிகள் அல்லது விளம்பரங்கள் சமூகத்தைப் பாதிக்கும் வகையில் அமைந்திருப்பதாக ஆணையம் கூறியது.
மலேசியாவின் பல்லின, பல சமய சமுதாயத்தை மதித்து, நாகரிகமாக நடந்து கொள்வது முக்கியம் என்று உள்துறை அமைச்சின் கீழ் செயல்பட வேண்டும் என ஆணையம் சுட்டிகாட்டியுள்ளது.
எனவே, உள்ளாடை விளம்பரங்களை நிகழ்ச்சிகளிலிருந்து உடனே அகற்றுமாறு ஆணையம் கேட்டுக்கொண்டது.