ஜி ஜின்பிங்குடன் கைகுலுக்க மறுத்த மலேசிய முதல் பெண்மணி! இணையத்தில் வைரலாகும் வீடியோ
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் மலேசிய முதல் பெண்மணி கைகுலுக்க மறுத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீன ஜனாதிபதிக்கு கைகுலுக்க மறுத்த மலேசியாவின் முதல் பெண்மணி
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாடு சீனாவில் சமீபத்தில் நடைபெற்றது, இதில் இந்தியா, ரஷ்யா, மலேசியா போன்ற நாடுகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த மாநாடு உலக அரசியல் அரங்கில் புதிய அத்தியாயங்களை திறந்துள்ள நிலையில், மாநாட்டின் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
From the #SCOSummit2025China 🚨
— Mohd Shadab Khan (@VoxShadabKhan) September 2, 2025
Malaysia’s former Deputy PM & veteran politician Dr. Wan Azizah, wife of PM Anwar Ibrahim, made headlines after she refused to shake hands with Chinese President Xi Jinping. pic.twitter.com/KLJZRnjiV0
அந்த காணொளியில் மலேசியாவின் முதல் பெண்மணி டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உடனான சந்திப்பின் போது அவருடன் கை குலுக்க மறுத்து குனிந்து கைகூப்பி வணக்கம் வைத்தது இடம்பெற்றுள்ளது.
ஆனால் அதே சமயம் மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் சீனாவின் முதல் பெண்மணி பெங் லியுவான் உடன் கை குலுக்கியது சமூக ஊடகங்களில் பரபரப்பான விவாதத்தை தூண்டியுள்ளது.
அதில் பயனர் ஒருவர், வான் அசிசா வான் இஸ்மாயிலின் மதத்தில் ஆண்களும் பெண்களும் கை குலுக்க கூடாது, எனவே சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்-உடன் கைகுலுக்க மறுத்துவிட்டார், ஆனால் ஏன் பிரதமர் இப்ராஹிம் சீன முதல் பெண்மணியுடன் கைகுலுக்கினார், இது போலித்தனம் என எழுதியுள்ளார்.
சிலர் மலேசிய முதல் பெண்மணிக்கு ஆதரவான கருத்தையும் பதிவிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |