மலேசியாவில் வரலாறு காணாத கனமழை! வெள்ளத்தில் மூழ்கி 46 பேர் பலி!
மலேசியாவில் கனமழையால் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46-ஆக உயர்ந்துள்ளது.
மேலும், குறைந்தது 5 பேரைக் காணவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென் கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் கடந்த வாரம் முதல் கொட்டித்தீர்த்த கனமழையால் அந்நாடு வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் மார்ச் வரை பருமழை பெய்யும் காலம் என்றாலும் இந்த ஆண்டு மலேசியாவில் வரலாறு காணாத அளவில் கன மழை கொட்டி தீர்த்தது.
Photo: Reuters/Ebrahim Harris
இடைவிடாது கொட்டிய கனமழையால் 8 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பெனிசுலா மலேசியா மாகாணத்தின் பஹங் (Pahang), சிலங்கர் (Selangor) ஆகிய 2 நகரங்கள் மிகவும் மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது.
கனமழை காரணமாக பல்வேறு மாகாணங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
தாழ்வான பகுதிகளில் இருந்த 54,532 பேர் மீட்கப்பட்டு 300க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Photo: Reuters/Ebrahim Harris
இந்நிலையில், வரலாறு காணாத அளவுக்கு கொட்டித்தீர்த்த கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46-ஆக அதிகரித்துள்ளது.
"இன்னும் ஐந்து பேரைக் காணவில்லை. அவர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று காவல்துறை தலைமைக் கண்காணிப்பாளர் அக்ரில் சானி அப்துல்லா சானி கூறியுள்ளார்.
Photo: Reuters/Ebrahim Harris
Photo: Reuters/Ebrahim Harris
Photo: Reuters/Ebrahim Harris