திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த விசித்திர செயல்! சுவாரஸ்ய தகவல்
மலேசியாவில் திருமணம் முடிந்த அடுத்த நாளே கல்லறைக்கு சென்றுள்ள நிகழ்வு அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவின் தலைநகரான Kuala Lumpur என்ற பகுதியில் வசித்து வருபவர் Muhammad Ridzuan Osman(34) இவரது மனைவி Nur Afifah Habib(26). இவர்கள் இருவரும் டிசம்பர் 13ஆம் திகதி திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் திருமணம் முடிந்த அடுத்த நாளே கல்லறைக்கு சென்று முன்கள பணியாளராக மாறியுள்ளனர். Muhammad கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுக்கும் பிரிவில் பணிபுரிந்து வருகிறார்.
இவர்களுக்கு திருமணம் முடிந்த பிறகு கொரோனா நோயாளிகளை தகனம் செய்ய வேண்டும் என்று குழுவிடம் இருந்து தகவல் வந்துள்ளது. இதையடுத்து இருவரும் கொரோனா தொற்றால் உயிர் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்ய முடிவு செய்து கல்லறைக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் இருவரும் சேர்ந்து சுமார் 15 உடல்களை தகனம் செய்துள்ளனர். இந்த புதுமண தம்பதிக்கு இருக்கும் சமூக ஆர்வத்தை கண்டு மக்கள் பாராட்டி வருகின்றனர்.