ட்ரம்பின் நடவடிக்கையால் பிற நாடுகளுடன் வர்த்தக உறவு: கட்டியெழுப்புவோம் என அறிவித்த பிரதமர்

Donald Trump Prime minister United States of America Malaysia
By Sivaraj Feb 04, 2025 09:52 AM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பிற்கு காத்திருக்காமல், பிற நாடுகளுடன் வர்த்தக உறவை கட்டியெழுப்ப தங்கள் நாடு தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும் என மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். 

கூடுதல் 10 சதவிகித வரி 

அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் அனைத்து சீனப் பொருட்களுக்கும் கூடுதல் 10 சதவிகித வரி செலுத்தும் நடைமுறையை ட்ரம்ப் அமுல்படுத்தியுள்ளார்.

அதேபோல் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் 25 சதவிகித வரி விதிக்கப்படும் என்றும் ட்ரம்ப் மிரட்டல் விடுத்தார். 

Donald Trump

இந்த நிலையில், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் (Anwar Ibrahim) சீனா, ரஷ்யா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தக உறவைக் கட்டியெழுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார். 

வர்த்தக உறவை மேம்படுத்த

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் கூறுகையில், "கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு எதிரான கடுமையான வரி விதிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளார். வர்த்தக உறவை மேம்படுத்த, அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு மலேசியா காத்திருந்தால் அது நாட்டுக்கும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்" என்றார். 

சீன ஜனாதிபதிக்காக தயாராகும் Bunker: அதிகரிக்கும் மூன்றாம் உலகப்போர் அச்சம்

சீன ஜனாதிபதிக்காக தயாராகும் Bunker: அதிகரிக்கும் மூன்றாம் உலகப்போர் அச்சம்

மேலும் அவர், "சீனா மீதான அமெரிக்க வரி விதிப்பு இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பல புவிசார் அரசியல் நிச்சயமற்ற நிலையில் இருப்பதால், வரிவிதிப்பை எதிர்கொள்வதில் மலேசியா அவசரம் காட்டக் கூடாது" என தெரிவித்துள்ளார்.

அத்துடன் வர்த்தகப் பங்காளிகளுக்கான கட்டமைப்பை உருவாக்க தேவையான, ஊக்கமான செயல் நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.       

Anwar Ibrahim 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US