பதவியேற்ற மறுநாளே இந்திய இராணுவத்தை வெளியேற சொன்ன மாலத்தீவு அதிபர்
இந்தியா தனது ராணுவத்தை வாபஸ் பெறுமாறு மாலத்தீவு அரசு அதிகாரப்பூர்வமாக கேட்டுக் கொண்டுள்ளது.
மாலத்தீவில் இருந்து ராணுவ வீரர்களை திரும்பப் பெறுமாறு இந்தியாவிடம் மாலத்தீவு அரசு முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளதாக மாலைதீவு அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலத்தீவின் எட்டாவது அதிபராக மொஹமட் முய்ஸு (Mohamed Muizzu) வெள்ளிக்கிழமை பதவியேற்ற பிறகு, இன்று (நவ.18), தீவில் இருந்து இந்தியா தனது இராணுவ படைகளை திரும்பப் பெறுமாறு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக கேட்டுக் கொண்டதாக அறிவித்தார்.
இதையடுத்து, இரு நாடுகளும் "செயல்படக்கூடிய தீர்வை" காண முயற்சிக்கும் என்று இந்திய தரப்பு தெரிவித்துள்ளது.
இந்திய புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவை ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று சந்தித்தபோது ஜனாதிபதி முகமது முய்சு முறைப்படி கோரிக்கை விடுத்தார்.
45 வயதான முய்சு, சீன சார்பு அரசியல்வாதியாகக் கருதப்படுகிறார், மாலத்தீவின் எட்டாவது ஜனாதிபதி ஆவார்.
முய்ஸு அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, இந்திய இராணுவத்தின் இருப்பை விரைவில் அகற்றுவதே தனது முதன்மையான முன்னுரிமை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இந்தியா-மாலத்தீவு ஒத்துழைப்பு குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், மாலத்தீவுடனான ஒத்துழைப்பையும் கூட்டாண்மையையும் தொடர இந்தியா எதிர்பார்ப்பதாகக் கூறியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |