இந்தியா மீதான வெறுப்பு: மாலத்தீவு ஜனாதிபதியின் முடிவால் பரிதாபமாக பறிபோன உயிர்

Maldives
By Arbin Jan 21, 2024 03:17 AM GMT
Report

அவசர சிகிச்சைக்கு இந்திய விமானத்தை பயன்படுத்த தடை விதித்த மாலத்தீவு ஜனாதிபதியால், அந்த நாட்டு சிறுவன் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

14 வயது சிறுவனுக்காக

இந்தியாவின் HAL நிறுவனம் தயாரித்த குட்டி விமானம் ஒன்று, மனிதாபிமான அடிப்படையிலான அவசர தேவைகளுக்காக மாலத்தீவில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தீவிர மருத்துவ உதவி தேவைப்பட்ட 14 வயது சிறுவனுக்காக அந்த விமானத்தை பயன்படுத்த மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா மீதான வெறுப்பு: மாலத்தீவு ஜனாதிபதியின் முடிவால் பரிதாபமாக பறிபோன உயிர் | Maldives Boy Dies President Denies Plane Credit: twitter

குறித்த சிறுவன் மூளை கட்டி மற்றும் பக்கவாதத்தால் போராடி வந்துள்ளார். இந்த நிலையில் அவசர சிகிச்சைக்காக சிறுவனின் குடும்பத்தினர் அந்த விமானத்தை பயன்படுத்த அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளனர்.

புதன்கிழமை அந்த சிறுவன் பக்கவாதத்தால் அவதிப்பட, உடனடியாக தலைநகர் மாலிக்கு கொண்டு செல்லும் பொருட்டு சிறுவனின் பெற்றோர் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் வியாழக்கிழமை பகல் வரையில் அரசாங்கத்திடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று கூறப்பட்டுகிறது.

நீண்ட 16 மணி நேரம் தாமதமான நிலையில், சிறுவன் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை வளாகத்தில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் சிறுவனின் தந்தை தெரிவிக்கையில், புதன்கிழமை முன்வைத்த கோரிக்கைக்கு அவர்கள் வியாழக்கிழமை பகல் 8.30 மணிக்கு பதிலளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

உயிரைக் கொடுக்க வேண்டியதில்லை

இதனிடையே தனியார் நிறுவனம் ஒன்றின் சார்பில் சிறுவன் மாலி நகர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளான். தொடர்ந்து உடனடியாக அவசர சிகிச்சை பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளான். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் மரணமடைந்துள்ளான்.

இதனிடையே, அரசாங்கத்தின் மெத்தனத்தை குறிப்பிட்டு உள்ளூர் மக்கள் சிறுவன் மரணமடைந்த மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மாலத்தீவு நாடாளுமன்ற உறுப்பினர் மீகைல் நசீம் தெரிவிக்கையில், ஜனாதிபதிக்கு இந்தியா மீதான பகைமையை போக்க மக்கள் தங்கள் உயிரைக் கொடுக்க வேண்டியதில்லை என்றார்.

ஆனால் உண்மையில் இந்த விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட்டாரா அல்லது அதிகாரிகளே முடிவெடுக்க தாமதப்படுத்தினார்களா என்பது தொடர்பில் தகவல் ஏதும் வெளியாகவில்லை.

இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், நடந்த இந்த அசம்பாவிதத்தை ஜனாதிபதிக்கு எதிராக திருப்பி விடவும் வாய்ப்புள்ளதாக சில அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US