சிறுமியை துஸ்பிரோயகம் செய்த குற்றச்சாட்டில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கைது
maldives ex external minister abdulla shahid arrested: சிறுமியை துஸ்பிரோயகம் செய்த குற்றச்சாட்டில் மாலத்தீவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் வெளியுறவு அமைச்சர் கைது
2018 முதல் 2023 வரை மாலத்தீவின் வெளியுறவு அமைச்சராகவும், 2009 முதல் 2014 வரை நாடாளுமன்ற சபாநாயகராவும் பதவி வகித்தவர் அப்துல்லா ஷாஹித் (abdulla shahid).

2028 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில், மாலத்தீவின் எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் (MDP) தற்போது தலைவராக உள்ள ஷாஹித் ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு பிரச்சாரம் செய்து வந்தார்.
இந்நிலையில், 18 வயதுகுட்பட்ட சிறுமியை துஸ்பிரோயகம் செய்த குற்றச்சாட்டில், நேற்று இரவு அவரது இல்லத்தில் வைத்து அப்துல்லா ஷாஹித் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்படுவதற்கு சற்று முன்பு, "எனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அரசியல் ரீதியாகப் பரப்பப்படும் கதைகள் முற்றிலும் ஆதாரமற்ற பொய்கள்" என தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவரை கைது செய்துள்ள சம்பவம் மாலத்தீவு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.