வாங்க மாலத்தீவில் கொண்டாடலாம்.! உலக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு சிறப்பு அழைப்பு
ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்று உலக சாம்பியனான இந்திய அணிக்கு மாலத்தீவு சிறப்பு அழைப்பிதழ் அனுப்பியுள்ளது.
இது குறித்து மாலத்தீவு சந்தைப்படுத்தல் மற்றும் மக்கள் தொடர்பு கழகம் (MMPRC) திங்களன்று பொது அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
கனடாவில் திருடப்பட்ட 400 கிலோ தங்கக் கட்டிகள்., இந்தியாவிற்கு கடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸ் சந்தேகம்
அதில், உலகக் கோப்பையை தங்கள் நாட்டில் கொண்டாடுவதை ஒரு மரியாதையாகக் கருதுகிறோம்.
"நாங்கள் அவர்களை ஹோஸ்ட் செய்ய ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்திய அணியை வரவேற்று, அவர்களின் வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்பது எங்களுக்குக் கிடைத்த மிகப் பாரிய கவுரவம்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான மற்றும் நீண்டகால கலாச்சார மற்றும் விளையாட்டு உறவுகளையும் இந்த அழைப்பிதழ் எடுத்துக்காட்டுகிறது என்று MMPRC-இன் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநரான இப்ராஹிம் ஷியூரி கூறியுள்ளார்.
பார்படாஸில் ஜூன் 29 அன்று நடந்த இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Maldives' tourism body invites T20 World Champions Indian team to celebrate trophy, Maldives India