இந்திய தேசியக் கொடிக்கு அவமரியாதை., சர்ச்சைக்கு பிறகு மன்னிப்பு கேட்ட மாலத்தீவு அமைச்சர்
இந்திய தேசியக் கொடியை அவமரியாதை செய்யும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டதால், இடைநீக்கம் செய்யப்பட்ட மாலத்தீவு அமைச்சர் மன்னிப்புக் கோரியுள்ளார்.
மாலத்தீவு அமைச்சர் மரியம் ஷியூனா (Mariyam Shiuna) இந்திய தேசியக் கொடியை அவமதித்து சர்ச்சைக்கு ஆளாகியுள்ளார்.
இந்தியாவில் உள்ள எதிர்ப்பை விட மாலத்தீவில் உள்ள எதிர்ப்பு முய்சு அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுத்தது.
சர்ச்சை வலுத்ததையடுத்து அந்த பதிவை அமைச்சர் நீக்கினார்.
முன்னதாக இந்தியாவில், பிரதமர் மோடியை அவமானப்படுத்தியதற்காக முய்சு அமைச்சரவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார் மரியம் ஷியூனா.
தற்போது இரண்டாவது முறையாக இந்தியாவை அவமதித்து அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.
மரியம் ஷியுனா மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸைச் சேர்ந்தவர்.
மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், ஜனாதிபதி முகமது முய்சுவின் அரசாங்கத்தில் அமைச்சர் மரியம் பிரசாரத்தில் பெரிதும் ஈடுபட்டுள்ளார்.
இந்தியாவிற்கு எதிரான அலையை உருவாக்கி வாக்குகளைப் பெற முயலும் முய்சு அரசின் அமைச்சர்கள் இந்தியாவிற்கு எதிரான பேச்சுக்களை பேசி வருகின்றனர்.
"சமூக வலைதளங்களில் சமீபத்தில் நான் வெளியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பதிவு ஏற்படுத்திய குழப்பம் மற்றும் சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Mariyam Shiuna, Maldives India Relationship, Maldivian President Mohamed Muizzu, Indian National Flag